அரச உயர் மட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்? தென்னிலங்கையில் தீயாய் பரவும் செய்தி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) செயலாளராக கடமைபுரிந்துவரும் பி.பி ஜயசுந்தர(P. B. Jayasundera) அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்ற தகவலை தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா சென்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் இந்த மாற்றம் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அரச தலைவரின் செயலாளர் ஜயசுந்தர மாற்றப்பட்டால் அப்பதவிக்கு அரச தலைவரின் ஆலோசகராக உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மிக நெருக்கமானவரான லலித் வீரதுங்க நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்கு, அரச தலைவரின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர நாட்டிற்கு ஆற்றிய சேவை 'மிகவும் போதுமானது' என கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான திலீத் ஜயவீர தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

பிபி ஜயசுந்தர குறித்து அண்மைய நாட்களில் கடுமையான விமர்சனங்கள் அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அவரது பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.