யாழ் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தகவல்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால மதிப்பீடு

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்த வருடத்தில் இன்றுவரையான காலப்பகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்றுவரை 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டிலே 2530 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, ஆண்டில் 2021 ஆம் ஆண்டிலே 2301 நோயாளர்களும் இணங்காணப்பட்டிருந்தார்கள்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது.
டெங்கு நுளம்பு அதிகரிப்பு

பின்பு குறைவான நிலை காணப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பானது அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆகவே பொது மக்கள் டெங்கினை கட்டுப்படுத்தி தாம் பாதுகாப்பாக இருப்பதோடு, எங்களுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.