உடன் நடைமுறைக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்ட சிகரட்டின் விலை! வரவு செலவுத்திட்ட உரையில் பசில் அதிரடி
Parliament
Basil Rajapaksa
SriLanka
Cigarettes
Budged 2022
By Chanakyan
உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் சிகரட்டுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இதன்படி சிகரட் ஒன்றுக்கான விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரைவு - செலவுத் திட்டத்தை (Budged) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உடனடியாக நடைமுறைக்க வரும் வகையில் மது வரியும் அதிகரிக்கப்படும்.
25 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்து இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.