அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் உயர்வு!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Kanna
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட், நூடில்ஸ் உள்ளிட்ட பல அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 160 கிராம் நிறை கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிஸ்கட் வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி