முகக்கவசம் மற்றும் குடிதண்ணீர் போத்தல்களின் விலையும் உயர்வு
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம (Vidura Alkama) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 20 ரூபாவினாலும் 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களில் மாத்திரம் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் சடுதியான அதிகரிப்பை சந்தித்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நாட்டில் பல பாகங்களிலும் மோதல் நிலைமைகளும் வீதி மறியல் மற்றம் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
