சந்தையில் பொருட்களின் விலையேற்றம்...! அநுர அரசை கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி.

Anura Kumara Dissanayaka V S Radhakrishnan Economy of Sri Lanka General Election 2024
By Thulsi Oct 23, 2024 04:46 AM GMT
Report

சந்தையில் தற்பொழுது தேங்காய், பாக்கு, முட்டை உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) கேள்வியெழுப்பியுள்ளார்.

பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு நேற்று (22) மாலை நுவரெலியா - நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேங்காய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊழல் செய்த அரசியல்வாதி

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சந்தையில் பொருட்களின் விலையேற்றம்...! அநுர அரசை கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி. | Price Of Coconut Has Increased In The Market

அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு ஜனாதிபதி தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள்.

தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்

பொருளாதார வீழ்ச்சி 

தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்சியம் ஆனவர்கள் கிடையாது. ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள்.

சந்தையில் பொருட்களின் விலையேற்றம்...! அநுர அரசை கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி. | Price Of Coconut Has Increased In The Market

அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆசனங்களையாவது பெற முடியும்.

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது.

இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என  இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்