மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, சதொச விற்பனை நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நாளை (2024.07.25) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
சதொச பால் மா
பால் மாவின் 400 கிராம் பொதியின் முன்னைய விலை 950 ரூபாவாகவும் புதிய விலை 910 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சைப்பயிறு 998 ரூபாவாகவும், புதிய விலை 965 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ கருவாடு 978 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 950 ரூபாவாகும்
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் முந்தைய விலை 455 ரூபாவாகவும், புதிய விலை 444 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மாவின் தற்போதைய விலை 190 ரூபாவாகவும் புதிய விலை 185 ரூபாவாகவும் பெறமுடியும்.
வெள்ளை சீனி
ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாவாகவும், புதிய விலை 258 ரூபாவாகவும் குறைப்பு ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாவாகவும், புதிய விலை 199 ரூபாவாகவும் குறைந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |