பெரிய வெங்காய இறக்குமதிக்கு சதொச அனுமதி!
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காய இறக்குமதியை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம் நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியதாக அதிகரித்தது.
இதன், முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய சதொச தீர்மானித்துள்ளது.
சதொச ஊடாக இறக்குமதி
வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சில் கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2,000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி
எதிர்வரும் 2 வாரங்களில் முதல் கையிருப்பாக 2,000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் தேவைப்படுகின்ற பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |