தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்: முழு ஆதரவளித்த திகாம்பரம்
தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பூரண ஆதரவளிப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்(Palani Digambaram) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை(22) முதல் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அவர் இவ்வாறு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் இன்று(20) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு தேயிலை தோட்ட நிறுவனங்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) ஆலோசனை வழங்கிய போதிலும் அவர்கள் சம்பளத்தை அதிகரிக்க மறுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு தோட்ட தொழிலாளி ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவுடன் சேர்த்து 400 ரூபாவை அதிகரிக்க தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
தேயிலைக் காணி
இதனுடன் எஞ்சிய 300 ரூபாவை நிபந்தனைகளுடன் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளைப் பகிர்ந்தளித்து அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக்கி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பதாக திகாம்பரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |