பால்மாவின் விலை குறைப்பு
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
By Dhilak
பால்மா இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலையை நாளை மறுநாள் (16) முதல் ரூ.125 குறைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை ரூ.50 குறைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
முடிவுக்கான காரணம்
உலக சந்தையில் பால்மா விலை குறைந்து வருவதால், அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால்மா விலையை குறைக்க எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |