சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Food Shortages
Sri Lanka Food Crisis
Sugar Price
Sugar
By Thulsi
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
மேலும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.
மேலும், அனைத்து சதொச அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 13 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்