எரிபொருள் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை குறையுமா..!
எரிபொருள் விலை திருத்தம், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று(01) இரவு முதல் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் (NMCRP) தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் விலைசூத்திரத்திற்கு அமைய நேற்றிரவு(31) ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ராலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேநீர், கொத்து ரொட்டி மற்றும் மதிய உணவு விலைகள்
இதனால் ஒரு கப் தேநீரின் விலை ரூ.10 ஆகவும், கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டி ரூ.20 ஆகவும் குறைக்கப்படவேண்டும் .அத்துடன், மதிய உணவுப் பொதியின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
இந்த குறைப்பு நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமையவேண்டும், எனவே அனைத்து வர்த்தகர்களும் விலைகளை குறைத்து இந்த சேமிப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதானகே கூறினார்.
"நுகர்வோர் விவகார அதிகாரசபையானது (CAA) இந்தச் சலுகையை நுகர்வோருக்கு வழங்கத் தவறும் எந்தவொரு வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
