மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
Sri Lankan Peoples
Wasantha Samarasinghe
By Sumithiran
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.
இதன்படி, இந்த வாரத்தில் டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தயாராக இருப்பதாக சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
டின்மீன் விலை
இப்போதும் சந்தையில் 425 கிராம் டின்மீன் விலை 490 ரூபாயாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்து வருகின்றனர்.
அரிசி இறக்குமதி
இதன்படி, இந்த வாரம் டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும், அரிசி இறக்குமதிக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி