வாகன இறக்குமதி தாமதம் : உச்சம் தொட்ட பயன்படுத்திய கார்களின் விலை
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமை காரணமாக வாகன விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (18) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகள் வெளியாகி உள்ளன.
வாகனங்களின் விலைகள்
ஒன்லைன் கார் விற்பனை இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்ட பல வாகனங்களின் விலைகள் வருமாறு,
முந்தைய விலை – டொயோட்டா – பிரீமியர் – 2017 – ஒரு கோடி நாற்பத்தாறு லட்சம் புதிய விலை - டொயோட்டா - பிரீமியர் - 2017 - ஒரு கோடி எழுபது லட்சம்
முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 80 லட்சம் புதிய விலை - Toyota - Vitz - 2018 - 88 லட்சம்
முந்தைய விலை - Toyota - Aqua G - 2012 - 60 லட்சம் புதிய விலை - டொயோட்டா - அக்வா ஜி - 2012 - 68 லட்சம்
முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 இலட்சம் புதிய விலை – Honda – Vessel – 2014 – 98 இலட்சம்
முந்தைய விலை - ஹோண்டா - ஃபிட் - 2012 - 53 லட்சம் புதிய விலை - ஹோண்டா - ஃபிட் - 2012 - 85 லட்சம்
முந்தைய விலை - ஹோண்டா - கிரேஸ் - 2014 - 78 லட்சம் புதிய விலை - ஹோண்டா - கிரேஸ் - 2014 - 93.5 லட்சம்
முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் புதிய விலை – Nissan – X-Trail – 2015 – ஒரு கோடி முப்பது லட்சம்
முந்தைய விலை – சுஸுகி – வேகன் ஆர் – 2014 – 47 லட்சம் புதிய விலை - சுஸுகி - வேகன் ஆர் - 2014 - 57 லட்சம்
முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 30 லட்சம் புதிய விலை - Suzuki - Alto - 2015 - 33 லட்சம்
முந்தைய விலை - சுஸுகி - ஜப்பான் ஆல்டோ - 2017 - 45 லட்சம் புதிய விலை - சுசுகி - ஜப்பான் ஆல்டோ - 2017 - 53.75 லட்சம்
முந்தைய விலை - மைக்ரோ - பாண்டா - 2015 - 23 லட்சம் புதிய விலை - மைக்ரோ - பாண்டா - 2015 - 25.5 லட்சம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |