“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு

Jaffna Hindu College IBC Tamil Jaffna Cricket
By Kanna Sep 04, 2022 08:41 AM GMT
Report

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நான்காவது நாள் சுற்றுப்போட்டி இன்று (04) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிகள்  

யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதலாவது போட்டியில் ஜப்னா றோயல்ஸ் மற்றும் றைசிங் ஸ்ரார்ஸ் ஆகிய அணிகளும், இரண்டாவது போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் மற்றும் சுழிபுரம் றைனோஸ் ஆகிய அணிகளும், மூன்றாவது போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் கிரிகெட் நைட்ஸ் ஆகிய அணிகளும் மோதிக் கொள்கின்றன.

போட்டி - 3  (நேரலை)

இன்றைய நாளுக்கான மூன்றாவது போட்டி - அரியாலை கில்லாடிகள் 100  எதிர்  கிரிகெட் நைட்ஸ்


போட்டி - 2 (காணொளி)

இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டி -   சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் எதிர் சுழிபுரம் றைனோஸ்

“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு | Priders Premier League Jaffna Live Score

“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு | Priders Premier League Jaffna Live Score

போட்டி - 1(காணொளி)

இன்றைய நாளுக்கான முதலாவது போட்டி -  ஜப்னா றோயல்ஸ் எதிர் றைசிங் ஸ்ரார்ஸ்

யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் நான்காவது நாளான இன்று முதல் போட்டியில் ஜப்னா றோயல்ஸ் மற்றும் றைசிங் ஸ்ரார்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி 19 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் 17.1 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுக் கொண்டது.

போட்டியின் ஆட்டநாயகனாக 5 இலக்குகளை கைப்பெற்றிய ஜப்னா றோயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் சத்தயன் தெரிவானார்.

“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு | Priders Premier League Jaffna Live Score

“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு | Priders Premier League Jaffna Live Score

“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” நான்காவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு | Priders Premier League Jaffna Live Score

இதுவரை முடிவடைந்த போட்டிகளின் ஆட்ட நிலவரங்கள்

இதேவேளை, பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இதுவரை 8 போட்டிகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை முடிவடைந்த போட்டிகளின் ஆட்ட நிலவரங்கள் வருமாறு,

ஆட்ட நிலவரம் - போட்டி 1

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) முதல் போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 2

இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 3

மூன்றாவது போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 4

யாழ் சீட்டாஸ் அணியும் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் சீட்டாஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி 17.4 பந்துப் பரிமாற்றங்களில் 10 விக்கட்கள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 111 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியின் ஜி.ஜெரிக்தூசன் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 5

சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 144 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 21 ஓட்டங்கள் மூலம் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக அபினாஷ் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 6

நேற்று(3) சனிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டியில் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி மோதியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19.1 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.

127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி, 18.4 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 7 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்ட நிலவரம் - போட்டி 7

இரண்டாவது போட்டியில் யாழ் சீட்டாஸ் அணியை எதிர்த்து வேலனை வேங்கைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி 19.2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வேலனை வேங்கைகள் அணி , 18.2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 5 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்ட நிலவரம் - போட்டி 8

மூன்றாவது போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி மற்றும் ஏ1 ராஜா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் 6 விக்கட்களை இழந்து 210 ஓட்டங்களை குவித்திருந்தது.

211 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏ1 ராஜா அணி 20 பந்து பரிமாற்றங்களில் 7 விக்கட்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி