யாழில் ஆலய நகையை திருடிய இளம் குருக்கள் கைது:

Jaffna Hinduism
By Shadhu Shanker Jul 22, 2024 12:44 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna), ஊர்காவற்றுறையில் (Kayts) உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன.

இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

கோவில் நகை

ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

யாழில் ஆலய நகையை திருடிய இளம் குருக்கள் கைது: | Priest Arrested Jaffna For Stealing Temple Jewels

இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

புளியங்கூடல் சந்தியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மக்கள், முத்துவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வேண்டி சிதறு தேங்காயும் அடித்திருந்தனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

மக்களின் குற்றச்சாட்டு

இந்த விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்ற மக்களின் குற்றச்சாட்டு, யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராக காளிங்க ஜெயசிங்கவின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் காவல்துறை பிரிவுக்கு மாற்றினார்.

யாழில் ஆலய நகையை திருடிய இளம் குருக்கள் கைது: | Priest Arrested Jaffna For Stealing Temple Jewels

அதன்பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலக வழிகாட்டலில் உபகாவல் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான காவல் குழு இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் நேற்று(21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய குருக்கள் ஒருவராவார். அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவிக் குருக்களாகச் செயற்பட்டிருந்தார்.

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்

கொண்டாடிய மக்கள்

சந்தேகநபரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவையும் மீட்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் ஆலய நகையை திருடிய இளம் குருக்கள் கைது: | Priest Arrested Jaffna For Stealing Temple Jewels

இதேவேளை, சந்தேநபர் கைது செய்யப்பட்டு, கோயில் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் அதை வெடி வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024