ஆரம்பபிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கொரோனா
corona
anuradapuram
primary student
By Sumithiran
நாட்டின் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அநுராதபுரம் பதவிய கொங்கெட்டியாவ வித்தியாலய ஆரம்பப் பாடசாலையில் மூன்று வகுப்புகளில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், சுமார் 90 மாணவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொங்கட்டியாவ கல்லூரியில் தரம் 2, 3 மற்றும் 4 இல் கல்வி கற்கும் நான்கு மாணவர்களே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலைக்கு எந்த மாணவரும் வரவில்லை எனவும் ஆசிரியர்கள் மாத்திரம் வருகை தந்துள்ளதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.