அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை -பிரதமர் ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை
இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதை அமைச்சரவை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சரவைப் பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமர் தீர்மானித்துள்ளார்.

மரண அறிவித்தல்