அமெரிக்காவில் தோல்வியடைந்த மரணதண்டனை முயற்சி: சிறைத்துறை ஆணையாளர் பதவி விலகல்

United States of America World
By Pavi Oct 03, 2026 08:39 PM GMT
Report

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை கைதி கிறிஸ்டா பைக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் சிறைத்துறை ஆணையாளர் பிராங்க் ஸ்ட்ராடா பதவி விலகியுள்ளார்.

ஆளுநர் பில் லீ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிராங்க் ஸ்ட்ராடா இந்த மாதத்திற்குள் பதவியில் இருந்து விலகுவார் என அறிவித்துள்ளார்.

பதவி விலகுவது மாநிலத்தின் நலனுக்காகவும், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை முற்றிலும் அவசியமானது எனவும் ஸ்ட்ராடா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் இலக்குதலை தாக்கபோகும் உக்ரைன்! ஜெலென்ஸ்கி பகிரங்கம்

ரஷ்யாவின் எண்ணெய் இலக்குதலை தாக்கபோகும் உக்ரைன்! ஜெலென்ஸ்கி பகிரங்கம்

கிறிஸ்டா பைக்

1995ஆம் ஆண்டு 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கிறிஸ்டா பைக்கிற்கு 1996ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் தோல்வியடைந்த மரணதண்டனை முயற்சி: சிறைத்துறை ஆணையாளர் பதவி விலகல் | Prison Chief Resigns After Prisoners Deat

கடந்த புதன்கிழமை பைக்கிற்கு நச்சு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழக்கவில்லை.

பின்னர் அவர் ஆபத்தான நிலையில் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில் நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மரணதண்டனைக்காக பென்டோபார்பிட்டல் மருந்தின் இரண்டு மரண அளவுகள் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின்னரும் அவர் உயிருடன் இருந்ததாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது உடலில் செலுத்தப்பட்ட மருந்தை அகற்றுவதற்காக மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மரணதண்டனை முயற்சியின்போது பைக் அழுததாகவும், முனகியதாகவும், சத்தமாக சுவாசித்ததாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் சுயநினைவின்றி, செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண ஊசி

இந்த சம்பவம் தொடர்பில் ஆளுநர் பில் லீ சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் டென்னசி மாநிலத்தில் அனைத்து மரணதண்டனைகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் தோல்வியடைந்த மரணதண்டனை முயற்சி: சிறைத்துறை ஆணையாளர் பதவி விலகல் | Prison Chief Resigns After Prisoners Deat

பைக்கின் சட்டத்தரணிகள், சிறைத்துறை ஆணையாளரின் பதவி விலகல் நியாயமானது எனத் தெரிவித்துள்ள போதிலும், அது கிறிஸ்டா பைக்கின் தற்போதைய நிலைமைக்கு எந்த உதவியையும் செய்யாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஒரு தனிநபருக்கு அப்பாற்பட்ட அமைப்பு ரீதியான தோல்வியை பிரதிபலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பைக்கிற்கு இரத்தம் உறையும் பிரச்சினையான த்ரோம்போசைட்டோசிஸ் மற்றும் சிறிய இரத்த நாளங்கள் இருப்பதால், மரண ஊசி மூலம் தேவையற்ற வலி மற்றும் வேதனை ஏற்படக்கூடும் என அவரது சட்டத்தரணிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

எனினும், மரணதண்டனை முயற்சியைத் தடுக்க அவரது சட்டத்தரணிகள் மேற்கொண்ட பல்வேறு இறுதி நேர சட்ட நடவடிக்கைகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

மரணதண்டனை முயற்சி ஏன் தோல்வியடைந்தது என்பது தொடர்பில் அதிகாரிகள் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், கிறிஸ்டா பைக்கிற்கு மீண்டும் மரணதண்டனை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுமா என்பதும் அறிவிக்கப்படவில்லை.

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026