சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி - மேலதிக விசாரணையில் காவல்துறை
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர், மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்
கைதிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில், அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பட்டியைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை காரணமாக அவர் இவ்வாறு உயிரை மாய்த்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |