வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் கழிவறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடியவர் வாத்துவ, தெல்துவ, தெவிருகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருளை வைத்திருந்த நிலையில்
குறித்த கைதி 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் களுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 29ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கைதி மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்டு கடந்த 06 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை
களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையின் விடுதி இலக்கம் 5ல் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |