உயர்தரம் பயிலும் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை
இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தில் தமிழ் மொழி மூலம் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு தகுதியான பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Valeboda)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய இரு நகரங்களிலும் தமிழ் மொழி மூல மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த வலேபொட, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் அளித்த உறுதிமொழி
இது தொடர்பான பிரச்சினையை சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் தகவல் பெறப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) இதன்போது தெரிவித்தார்.
பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கமைவாக தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்காலத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாடசாலை தேவையென்றால் அதற்கும் ஆலோசனைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |