ஊழியர்களுக்கு EPF வழங்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்...! அம்பலமான மோசடி
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) உரிய வகையில் வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe ) தெரிவித்துள்ளார்.
புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இடைத்தரகர்களின் தலையீடு
இதேவேளை, கடந்த வாரம் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்திருந்தார்.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில், சேவை வருங்கால வைப்பு நிதியிலிருந்து 30 சதவீத சலுகைகளை பெறும்போது சிலர் மோசடியான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கூடுதலாக இடைத்தரகர்களின் தலையீடும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்