ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தகத்தில் தவறான இணையத்தளம்!
ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு
இதையடுத்து, கிடைத்த முறையப்பாட்டை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடரப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரியவந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பில் அவசர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |