மின் வழங்கலில் நெருக்கடி! மெழுகு திரிக்கும் தட்டுப்பாடு - இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்
srilanka
government
shocking
peoples
power cut
By S P Thas
இலங்கையின் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் விநியோக துண்டிப்புக்கான தயார் நிலைகள் காணப்படுவதால், மக்கள் மெழுகுவர்த்திகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் மெழுகுவர்த்திகளும் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், கிடைக்கும் மெழுகு கழிவுகள் மூலம் மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது எனவும் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்