இலகு தொடருந்து திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் இலகு தொடருந்து போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது என தான் கருதுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (9) உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் குறித்து விரிவான ஆய்வொன்றை அரசாங்கம் மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வின் முடிவுகளின்படி இந்த திட்டம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மெட்ரோ பேருந்து
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "இந்தத் திட்டத்தின் நிர்மாணச் செலவு மற்றும் இதைப் பயன்படுத்தும் பயணிகளின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்த உண்மைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
இலகு தொடருந்து திட்டத்திற்குப் பதிலாக, பொருளாதார ரீதியாக அதிக பலன் தரக்கூடிய மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
குறிப்பாக, 'மெட்ரோ பேருந்து' போன்ற திட்டங்கள் அதிக சிக்கனமானவை என்பதால், அத்தகைய மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது” அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 5 மணி நேரம் முன்