வழமைக்கு திரும்பிய திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம்
2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 இலட்சம் திரிபோஷ பக்கெட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
திரிபோஷ உற்பத்தி

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுகிறது.
மாதாந்தம் தேவைப்படும் திரிபோஷவை உற்பத்தி செய்வதற்காக 15 மெட்ரிக் தொன் கிலோகிராம் அளவிலான சோளம் அவசியமாக உள்ளது.
இந்தத் தொகையை உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக அவை இந்தியாவில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் 3 வயதிற்கு அதிகமான குழந்தைகள் ஆகியோருக்கு மாத்திரமே தற்போது திரிபோஷ வழங்கப்பட்டு வருகிறது” - என்றார்.