செவ்வந்திக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவம் : கடுமையாக சாடும் பேராசிரியர்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகாலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன.
இளைஞர்,யுவதிகளின் மனதில் விதைக்கப்படும் தவறான எண்ணம்
இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படும் தகவல் ஒவ்வொரு மணி நேரமும் (breaking news) அறிவிப்பு செய்தது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என பல செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.
இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.
காவல்துறை அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளார்.
இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் கூட நடிக்க கூடும்
நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96ல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் கூட நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
