பண்டிகைக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் : நுகர்வோர் அதிகார சபையின் அறிவித்தல்
இலங்கையில் பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியைத் தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நாளை (30) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை அந்தக் காலப்பகுதியில், நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் விசேட சோதனைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
அதைவிட நுகர்வோர் முறைப்பாடுகள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சோதனைகளை மேற்கொள்ளல்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் சோதனைகள் மற்றும் விசாரணைகளை நடத்தவும், நுகர்வோர் அதிகமாக வாங்கும் ஆடைகள், நீடித்த பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைபேசி விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகள் நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபையின் விசேட மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் எனவும், நாடு முழுவதும் உள்ள முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் சோதனைகளை அதிகாரசபை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |