வலுக்கும் உட்கட்சி மோதல் : பதவி விலகும் சஜித் அணியின் முக்கியஸ்தர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று (25) தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பதிவி விலகிய சமிந்த விஜேசிறி
அத்துடன் தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில் அதனைத் தொடர்ந்து மேலும் சில முக்கியஸ்தர்கள் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

