திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு! (காணொளி)
அம்பாறை - திருக்கோவில் காவல்துறை நிலையத்தில், சார்ஜண்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை - திருக்கோவில் காவல்துறை நிலையத்திற்குள் சார்ஜண்ட் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நாக்கு பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 24ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,