இராணுவ முகாமுக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்
யாழ் (Jaffna) பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
போராட்டம்
இந்தநிலையில், குறித்த போராட்டம் வருகின்ற திங்கட்கிழமை (25) முன்னெடுக்கப்படவுள்ளது.
திங்கட்கிழமை (25) காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அனைவரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
