ஐந்து வருட ஆட்சியில் நாட்டை மாற்ற முடியாது - சரணடைந்த பிரதியமைச்சர்
ஐந்து வருட ஆட்சிக்காலத்தினுள் நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த குறைந்த பட்சம் சுமார் இருபது ஆண்டுகள் ஆகும்.
குறுகிய கால மாயாஜால அரசியல்
அத்தகைய மாற்றத்தை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாது தென் கொரியா, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் இதே போன்ற காலகட்டங்களைக் கடந்து இந்த நிலையை அடைந்துள்ளன.
எங்களது அரசாங்கம் பாரிய மாற்றமொன்றுக்கான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. எனினும் ஐந்து வருட குறுகிய காலத்தில் எந்த மாயாஜால அரசியலையும் எதிர்பார்க்கக்கூடாது.
இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றினால், இந்த முழுமையான மாற்றத்தை நோக்கி நாம் நகர முடியும். சிறிய மாற்றங்களுக்காக நாங்கள் அதிகாரத்தை எடுக்கவில்லை.
ஒரு பெரிய மாற்றத்திற்காக நாங்கள் அதிகாரத்தை எடுத்தோம். 'எங்கள் அரசியலை ஐந்து ஆண்டுகளில் வரும் குறுகிய கால மாயாஜால அரசியலுடன் ஒப்பிடாதீர்கள்.' என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
