தையிட்டி விகாரைக்கு எதிராக உருவெடுத்த போராட்டம்
புதிய இணைப்பு
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது தொடர்ந்தும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த விகாரையானது, மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், காணியின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பௌர்ணமி நாளான இன்று (13) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
காவல்துறையினர் குவிப்பு
இந்த நிலையில் குறித்த இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை கடந்த மாதமும் குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்