சட்டமா அதிபருக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று (21.01.2026) காலை கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் அமைதியான முறையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
தற்போதைய சட்டமா அதிபர் ஊழல் மற்றும் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
சட்டத்தரணிகள் சங்கம்
இதேவேளை, சட்டமா அதிபரை குறிவைத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அண்யைம பதிவுகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சில நபர்கள் இதுபோன்ற பதிவுகள் மூலம் சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிட முயற்சிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குற்றவியல் வழக்குகள் தொடர்பாக, சட்டமா அதிபர் ஒரு நீதித்துறை செயல்பாட்டைச் செய்கிறார் என்பதை அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணை அதிகாரிகள் முன்வைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதா இல்லையா அல்லது குற்றச்சாட்டுகளைத் தொடரலாமா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |