இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம்

Indian fishermen Jaffna India Sri Lanka Fisherman
By Shadhu Shanker Feb 26, 2024 10:25 AM GMT
Report

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேள் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம்(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

 கடலில் போராட்டம்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக் கொடிகளைத் தாங்கி நமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம்.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம் | Protest Against The Violations Of Indian Fishermen

இந்திய கடற்தொழிலாளர்களினால் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஆனால், இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டுவதை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்து வெளியிடுவது மனவேதனையை தருகிறது.

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல்

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள்

நாம் எமது கடலில் மீன் பிடிப்பதற்கு இந்திய அரசாங்கத்தை கேட்க வேண்டிய தேவை இல்லை அத்தோடு எமது கடலிலேயே இந்தியா கடற்தொழிலாளர்களுக்கு தாரைவாத்துக் கொடுக்கவும் முடியாது.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம் | Protest Against The Violations Of Indian Fishermen

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் சிலர், இலங்கை சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு அழுத்தம் வழங்கி வருகிறது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். எமது கடல் இறைமை. எமக்கே சொந்தமான கடலை யாருக்கும் தாரை வார்க்க முடியாது.

ஆகவே, இதனை வலியுறுத்தி கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதோடு எமது போராட்டம் இலங்கை கடல் எல்லை வரை தொடரவுள்ளது”தெரிவித்தார்.

துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை

துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021