மட்டக்களப்பில் ஆசிரியர் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (12-10-2026) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு திமிலைதீவில் கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாாரு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் குரல்
நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் எனும் தலைப்பிலான மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |