வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து தற்போழுது சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை சுகயீனமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முறுகல் நிலை
குறித்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வைத்தியருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் வீதி முடக்கல் போராட்டம் கைவிடப்பட்டதுடன் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனாவின் விடுதியில் மின் இணைப்பு மற்றும் நீர் விநியோகம் துடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தான் சுகயீன விடுமுறையை பெற்றுள்ள நிலையில், இவ்வாறு உயர் அதிகாரிகளால் மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் சந்திக்க சென்ற வைத்தியரின் சகோதரர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் கடுமையான வாக்குவாதங்களை அடுத்து அவர் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக செய்திகள் - கஜி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |