வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 12ஆவது வாரமாக போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் (06) 12ஆவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....
காணிகளை விடுவிக்க வேண்டும்
இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |