சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள்: தேர்தல் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
SL Protest
Sri Lanka Presidential Election 2024
By Aadhithya
பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகம் (Election Commison) முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது ‘பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஏற்பாட்டில் இன்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுயாதீன தேர்தல்கள்
அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ‘சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள், ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துங்கள், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி