போராட்ட களமாகும் சிறிலங்கா!! அணிதிரளும் மக்கள் படை
sri lanka
protest
Sajith Premadasa
Ranjith Madduma Bandara
sjb
By Vanan
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைகள் காரணமாக மக்கள் அலை சஜித் பிரேமதாசவையும் (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தியையும் நோக்கித் திரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 16ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் திட்டமிட்டவாறு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் 16 ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதனைத் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக இனியும் அஞ்சப்போவதில்லை என்றும் அதற்கான ஜனநாயக உரிமை தங்களுக்கு உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி