மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர்: திருகோணமலை கண்டன போராட்டம்
திருகோணமலையில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (13.11.2026) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை - அபேயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்
இந்நிலையில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை காவல்துறை மற்றும் கல்வித் திணைக்களம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று (நவம்பர் 13) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |