சீனாவின் இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மக்கள்
protest
china
world
genicide
By Sumithiran
உய்குரில் சீனா இனப்படுகொலை செய்வதை தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உலகின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டுத் தகவல்களின்படி, கிழக்கு துர்கெஸ்தான் மனித உரிமைக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களில் நடைபெற்றன.
எழுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 22, 1949 அன்று, கிழக்கு துர்கெஸ்தான் குடியரசை சீனா கவிழ்த்து சீனாவுடன் இணைத்தது. உய்குர், கசாக், துருக்கிய மற்றும் கிர்கிஸ்தான் சிறுபான்மையினர் மீது சீனா பாரிய அடக்குமுறையை முன்னெடுத்துள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில் சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தலையிடவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி