யாழில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் ''நீதியின் ஓலம் 2" : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Sri Lankan Tamils Jaffna SL Protest chemmani mass graves jaffna
By Theepan Jul 13, 2026 11:03 AM GMT
Report

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்படது.

இதன் தொடர்ச்சியாக, 14.08.2026 (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17/08/2026 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் "நீதியின் ஓலம் 2" எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளில் மாபெரும் பேரணியும் நடை பெறவுள்ளது.

யாழில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்

முன்பதாக தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக,யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 412க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.

குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பலரால் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்படுகொலைக்கு முன்னதாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கை அரச படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999 ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.

ஆயினும், பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் இயந்திரங்கள் அவற்றை முழுமையாக விசாரணை செய்யாமல், மூடி மறைத்து வந்தன.

கடந்த ஆண்டு, அப்பகுதியில் கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் அரச தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதைப் பற்றிய மற்றும் நீதியின் ஓலம் போன்ற கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு போராட்டங்கள் ஆக எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர் கட்டணம் செலுத்தாதோருக்கு முக்கிய அறிவிப்பு!

நீர் கட்டணம் செலுத்தாதோருக்கு முக்கிய அறிவிப்பு!

இதனடிப்படையில் "நீதியின் ஓலம் 2" போராட்டத்தின் கோரிக்கைகளாக 

1.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.

2.எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

3.தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4.தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

6."பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.

7. கடந்த 77ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.

8.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

9.Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட வேண்டும்.

10.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும்.

யாழில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்

மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, "நீதியின் ஓலம் 2" என்ற போராட்டம் 14.08.2026 அன்று மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து (17/08/2026) இறுதி நாள் மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும் ஒத்துழைப்பும் கோருகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026