போராட்டங்களால் தீர்வினைப் பெறமுடியாது - அமைச்சர் அலி சப்ரி விளக்கம்
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்று விடமுடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது.
காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால், அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். போராட்டத்தின் மூலம் அல்ல.
போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை. அதனை நான் மதிக்கின்றேன் - ஒருபோதும் தடுக்க மாட்டேன்” என்றார்.
