காவல்துறையினரை தாக்கிய ரணிலின் ஆதரவாளரான அரசியல்வாதி - நேர்ந்த கதி
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe Arrested
By Thulsi
கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
உத்தியோகத்தர் மீது தாக்குதல்
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன்போதே காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்