சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Suresh Premachandran Sri Lanka
By Shadhu Shanker Oct 28, 2023 05:42 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மாகாணசபையை அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றி, தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறத்தாழ ஒரு முழுமையான பதவிக்காலத்தை இழந்திருக்கும் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

''2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அதிபர் கூறியிருக்கின்றார்.

அநேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை | Provincial Council Election 2023

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கேள்வி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கேள்வி

தேர்தலுக்கு நிதி இல்லை 

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர். ஆனால் தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை | Provincial Council Election 2023

உள்ளூராட்சி சபை

இந்நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாகாணசபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் மீள்நிர்ணயம் செய்த பின்பு தேர்தல்கள் நடைபெறும் என்றும் பேசப்பட்டாலும் எல்லைகளை மீளவும் திருத்திக்கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகவே, மாகாண தேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை | Provincial Council Election 2023

இனப்பிரச்சினை

மாறாக, வடக்கு-கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்த பிக்குகளும் இராணுவமும் காவல்துறையினரும் கூட்டாக காணிகளைக் கபளீகரம் செய்வதும் அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்த கோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதுமாக அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட, அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது.

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை | Provincial Council Election 2023

இஸ்ரேல் - காசா : போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல் - காசா : போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

 பௌத்த மேலாதிக்கம்

அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மாகாணசபை அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது.

இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனூடாக மாகாணசபை ஒரு அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு; உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை | Provincial Council Election 2023

காலவரையறையின்றி 

ஆனால் இன்று மாகாணசபைக்கான தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்து அதே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள இருக்கின்ற அதிபரோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகளோ தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள விரும்பின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கிற்கான மாகாணசபைகளுக்கான தேர்தல்களையாவது நடத்தி அதற்கான அதிகாரங்களை வழங்கி அந்த மாகாண நிர்வாகங்கள் திறம்பட செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

சர்வதேச கடன்களை மீளச்செலுத்துவதற்கான காலங்கள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல்களுக்கான நிதி இல்லை என்று கூற முடியாது. ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம் - என்றுள்ளது. 

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் சுமனரத்ன தேரர்:அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் சுமனரத்ன தேரர்:அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024