மாகாண சபைத் தேர்தல் -வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியோம் - அரசாங்கம் ஆணித்தரம்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எந்தவொரு நாடும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் நோக்கில் மக்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவில்லை எனவும் இணை அமைச்சரவைப் பேச்சாளர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gamanpila) தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை எனவும், தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நிவாரணப் பொதியை வழங்குவதன் ஒரே நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.