மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்- மத்தும பண்டார சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.
கட்சித் தலைமையகத்தில் இன்று (03.10.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தொகுதி வாரியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், அந்த முன்மொழிவு தொடர்பில் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எவ்வாறாயினும், மாகாண சபை முறைமையை பழைய முறைமையின் கீழ் நடத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
எளிய பெரும்பான்மையின் கீழ் பழையை மாகாண சபை முறைமையை நிறைவேற்ற முடியும். அதற்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
தொகுதி வாரியாக தேர்தலை நடத்த அதிக காலம் எடுக்கும். அரசாங்கம் மீதான மக்களின் விருப்பத்தை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
இதேவேளை, ஜனநாயக உரிமைகள், இன நெருக்கடிக்கான பதில் மற்றும் மக்களின் விருப்பத்தை மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் தீர்மானிக்க முடியும்.“ என தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை திட்ட எதிர்ப்பில் காய்நகர்த்தும் முன்னாள் அரசியல்வாதிகள்! இப்படி கூறும் சந்திரசேகர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
