இடமாற்றங்களை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு இனி சிக்கல்
ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் தெரிக்கப்பட்டுள்ளது.
அவசர தீர்வுகள்
கல்வித் துறையில் இடமாற்றங்களை நிராகரிப்பது நீண்ட காலமாக நடந்து வருவதாகவும், இது இப்போது ஒரு பழக்கமாகிவிட்டதாகவும், எனவே இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசு சேவையில் இடமாற்றங்களை கடைப்பிடிக்காத ஒரே துறை இதுதான் என்றும் பிரதமர் ஹரிண குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அத்தகைய இடமாற்றங்களை கடைப்பிடிக்காத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
